கடலூர் தொகுதி – திருமுருகப் பெருவிழா

23

கடலூர் தொகுதி முதுநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தெற்கு நகரம் சார்பாக அன்னதானப்பெருவிழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வினை தொகுதி து.தலைவர் குகன்குமார் அவர்கள் தலைமையில் இளைஞர் பாசறை பொறுப்பாளர் முத்து ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் சாமிரவி அவர்கள் கலந்து கொண்டனர். இதில் முப்பாட்டன் முருகனை குடில் அமைத்து வணங்கி பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி சிறப்பித்தனர்.