ஈரோடு மேற்கு தொகுதி உழவர் பாசறை மூலம் ஈரோடு ஒன்றியம், சென்னிமலை ஒன்றியம் பகுதியில் மரபு வேளாண்மையையும் நாட்டு இரக நெல் வகையை உழவர் பெருங்குடிகளுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக, இயற்கை வேளாண்மை மூலம் ஒற்றை நாத்து, மீன் அமிலம், பூச்சி விரட்டி, தேமோர் கரைசல்,மாட்டூட்டம்(பஞ்சகாவியம்) ஆகிய இயற்கை மருந்துகளை பயன்படுத்தி பாரம்பரிய நெற்பயிர் காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா. மற்றும் கருப்பு கவுனி, சீரக சம்பா கிச்சடி சம்பா நெற்பயிர் 7 அடி வரை விளைவிக்கப்பட்டது. இயற்கை வேளாண்மையில் தங்களை முதன் முறையாக, தங்கள் நிலத்தில் செய்ய ஆரம்பித்த சென்னிமலை ஒன்றியம் இரகுபதி, குருமூர்த்தி, கலைக் கண்ணன். ஈரோடு ஒன்றியம் கி. யுவராசு, மு.மனோகரன், மா. கார்த்திக் ஆகியோர் மரபு வேளாண்மை கையிலெடுத்து வெற்றி பெற்றனர்.