சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் சமத்துவ பொங்கல் விழா 14/01/2021 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் பழனியாபுரியில் சிறப்பாக நடைபெற்றது. பழனியாபுரி கிளை செயலாளர் திரு. சசிகுமார் மற்றும் பழனியாபுரி கிளை மகளிர் பாசறை செயலாளர் திருமதி. கிருஷ்ணவேணி சசிகுமார் ஆகியோரின் முன்னெடுப்பில் நடந்த இந்த நிகழ்வில், நாம் தமிழர் கட்சி ஆத்தூர்(சேலம்) சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.