திருப்போரூர் தொகுதி – நிவர் புயல் பேரிடர் மீட்பு பணிகள்

22

25.11.2020 , 26.11.2020 அன்று காலை முதல் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி பகுதிகளில் நிவர் புயல் மற்றும் கன மழையினால் ஏற்பட்ட பேரிடர்களை நேரடியாக கள ஆய்வு செய்து மக்களுக்கான உதவிகள், தேங்கிய நீர்களை அகற்றுதல், நீர்நிலைகளின் தன்மை அதற்கான முன்னேற்பாடுகள் போன்ற பணிகள் தொகுதி முழுக்க மேற்கொள்ளப்பட்டது.இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு தொகுதி முழுக்க சுமார் 50 களப்பணியாளர்கள் கொண்ட பேரிடர் மீட்பு குழு நியமிக்கப்பட்டு தொகுதியின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களாக நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.