குவைத் செந்தமிழர் பாசறை – கலந்துரையாடல் உறுப்பினர் சேர்க்கை முகாம்

131

குவைத் செந்தமிழர் பாசறையின் 06.11.2020 வெள்ளிக்கிழமை அன்று
சபகியா பூங்கா வில் நடைபெற்ற சந்திப்பில் சபகியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள
பகுதிகளில் வசிக்கிற புதிய மற்றும் பழைய உறவுகளை சந்தித்து கலந்துரையாடல் சிறப்பாக நடந்து முடிந்தது.
2021 தேர்தல் முன்னெடுப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும்
தாயக தேர்தல் களத்தில் நமது குடும்ப உறவுகளின் வாக்குகளை நாம் தமிழருக்கான வாக்காக உறுதிபடுத்துவது குறித்த கலந்தாய்வு நன்றியுரையுடன் சிறப்பாக நடந்து முடிந்தது.
அதன் தொடர்ச்சியாக அன்று மாலை வளைகுடா சார்பாக ஒருங்கிணைப்பு செய்த இணையவழி கலந்தாய்வு, சர்வதேச செய்தி தொடர்பாளர் திரு. பாக்கியராசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அக்கலந்தாய்வில் குவைத் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு 2021 தேர்தல் இலக்கு பற்றிய பல்வேறு புதிய செயல் திட்டங்களை விவாதித்தனர்.

முந்தைய செய்திகிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா