புதுச்சேரி – முதலமைச்சரிடம் நேரில் மனு

25

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி காலாப்பட்டு தொகுதி சார்பாக முதலமைச்சரை சந்தித்து காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள கேம்பெப் அல்கலீஸ் தனியார் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இத்திட்டம் செயல்பட்டால், கடல் சார்ந்த 1700க்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தங்கள் வாழ்வதாரத்தை இழக்க நேரிடும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மண்ணின் பூர்வகுடி மீனவ பெருங்குடி மக்களை அவ்விடத்திலிருந்து அகற்றக்கூடிய அபாயம் உள்ளது. புதுச்சேரி அரசு திட்டமிட்டே இத்தகைய செயல்களைச் செய்து வருவதாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது. புதுச்சேரி அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை உடனே தடுக்க வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கபபட்டது. முதலமைச்சர் அவர்கள், நமது கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
அடுத்த செய்திநிலக்கோட்டை தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு