கொரோனா தொற்றால் ஓமனில் உயிர் இழந்த உறவுக்கு உதவி – செந்தமிழர் பாசறை ஓமன்

189

ஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த நாகர்கோவில் பகுதியைச் சார்ந்த திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-2020 அன்று மரணமடைந்தார். அவரது உடல் ஓமன் நாட்டின் சலாலா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.மறைந்த அப்துல் ரகீம் நாம் தமிழர் கட்சியின் புலம்பெயர் அமைப்பான செந்தமிழர் பாசறை உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
எனவே அவரின் குடும்பத்திற்கு உதவிடும் வகையில் செந்தமிழர் பாசறை ஓமன் அமைப்பின் நிதியாக ₹1,10,000 ரூபாயை இன்று அவரின் குடும்பத்தாரிடம்
நாகர்கோவில் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆறுதல் கூறி நேரில் சென்று அத்தொகையை வழங்கினார்கள்.