அணைக்கட்டு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

167

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி சார்பாக  22/11/2020 அன்று, ஒடுகத்தூர் பேரூராட்சி, சந்தை மேட்டில் நாம் தமிழர் கட்சியின்  தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் காலை 11.00 மணியளவில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது,
இதில் வருகின்ற 26/11/2020 அன்று தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் தொகுதியின் சார்பாக குருதிக்கொடை அளிக்கும் நிகழ்வு குறித்தும்,ஒடுகத்தூர் பேருராட்சி பகுதியில் அடுத்தகட்ட கட்சியின் வளர்ச்சி குறித்தும், அணைக்கட்டு தொகுதியில் புதிதாக கொடி கம்பங்கள் அமைத்து புலி கொடி ஏற்றுதல் போன்ற நிகழ்வுகள் முன்னெடுப்பது குறித்து பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் ஒருமனதாக ஆலோசனை செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தொகுதி தலைவர்கள், செயலாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள், மற்றும் வேலூர் மத்திய மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள், உறவுகள் அனைவரும் கலந்தாய்வில் கலந்துக் கொண்டனர்.