வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

10

உறவுகளுக்கு வணக்கம்….
வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வது வட்டத்தின் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இது நாள் வரையிலுள்ள வரவு செலவு கணக்குகள் அனைவரின் முன்பாக சமர்பிக்கப்பட்டது.
கலந்தாய்வில் பின்வரும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
1. ஊரடங்கு காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாதாந்திர சந்தா தொகை வசூலிப்பது.
2. வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு கட்சியை விளம்பரப்படுத்தும் விதமாக கொடிக்கம்பம், சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பர பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
3. உறுப்பினர் அட்டையை விரைந்து வழங்க அந்தந்த பகுதியை சேர்ந்த பொறுப்பாளர்களுக்கு உறுப்பினர் அட்டை பகிர்ந்து அளிக்க வேண்டும்.
கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.