மாணவ, மாணவிகளை தற்கொலைக்கு தூண்டும் *நீட் தேர்வை* ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி கரூர் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் பேருந்து நிலையம் அருகே மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உறவுகள் கலந்து கொண்டனர்.