ஆத்தூர் (சேலம்) சட்டமன்ற தொகுதி பனை விதை நடவு விழா.

54

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(6/9/2020) ஒட்டப்பட்டி காப்பு காட்டில் பனை விதைகள் ஊன்றும் நிகழ்வு நடைபெற்றது. பத்தாண்டு பசுமை திட்டம் பல கோடி திட்டம் என்ற அண்ணன் செந்தமிழன் சீமானின் ஆலோசனையின்படி முதற்கட்டமாக 2000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்வில், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.காசி மன்னன், பொருளாளர் திரு. ராஜ்குமார் மற்றும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திரு. தணிகைராசன், தலைவர் திரு. ராகேஷ், இணைச் செயலாளர் திரு. மணிவண்ணன், துணைச் செயலாளர்கள் திரு. தங்கராசு, திரு.பழனி, தகவல் தொழிநுட்ப பாசறை செயலாளர் திரு. சின்னதுரை உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு

*ராவணன் குடில், நாம் தமிழர் கட்சி (சேலம்)ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தலைமையகம், சார்பதிவாளர் அலுவலகம் அருகில், பெ.நா.பாளையம், சேலம் மாவட்டம்*
7845437073.


முந்தைய செய்திதோழர்.செங்கொடிக்கு வீரவணக்கம் – திருவாடானைத்தொகுதி
அடுத்த செய்திகிளை பொறுப்பாளர் நியமனம் மற்றும் கலந்தாய்வு- ஆலங்குளம் தொகுதி