பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க நாம் தமிழர் கட்சி விருதுநகர் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

57

■ நாட்டின் இயற்கை வளங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, *’சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’* -ஐ திரும்பப் பெற வேண்டியும்,

■ மும்மொழிக்கொள்கை எனும் பெயரில் எதற்கும் பயன்தராத, செத்துபோன சமற்கிருத மொழியை மாநிலங்களில் கட்டாயபடுத்தி திணிக்க முற்படுவது கல்வியை ஆரியமயப் படுத்தும் வேலையின்றி வேறில்லை. விருப்ப மொழி எனும் பெயரில் உள் நுழைக்கப்படும் சமஸ்கிருதம் நாளையே கட்டாய மொழியாக மாற்றப்பாட்டாலும் அதில் எவ்வித வியப்புக்கும் இடமில்லை. ஆகவே *தேசிய புதிய கல்விக் கொள்கை 2020* ரத்து செய்ய வேண்டியும்,

■ இந்த கொரோனா தொற்று காலத்தில் நடைமுறையில் ஊழல், லஞ்சம்- கையூட்டுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ள *E-PASS* முறையை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டியும் மற்றும் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் கொடுமையான சூழலில் வாழ்விழந்து வாகனம் இயக்க முடியாமல் தவித்து வரும் தனியார் வாகன ஓட்டுனர் சகோதரர்கள் மீது திணிக்கப்படும் ஒடாத வாகனங்களுக் கான சாலை வரி (அரையாண்டு காலம்), ஒரு வருட விபத்து காப்பீடை முதலியவற்றை புதுப்பிக்க கால அவகாசம் தரவேண்டியும், மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்யாத ஓட்டுநர்களுக்கும் தேவையான நிவாரண உதவி வழங்கிட வேண்டியும்,

■ நிதி நிறுவனங்கள் கந்துவட்டி முறையில் பொதுமக்கள் மீதும், மகளிர் சுய உதவி குழுக்கள் மீதும் வசூலித்து வரும் தாமத கட்டணத்திற்கான அநியாய வட்டி முற்றிலும் இரத்து செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி விருதுநகர் மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் அனைத்து தொகுதிகளின் உறவுகளுடனும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
தொடர்புக்கு : +91-9944853955