திருச்சி திருவெறும்பூர் தொடர்வண்டி பணிமனையில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்

67

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொன்மலை தென்னக தொடர்வண்டி பணிமனையில் – பழகுநர் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தியும், 
மத்திய மாநில அரசுப் பணிகளில் 90% வேலை வாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கே வழங்க வலியுறுத்தியும்.
தற்போது திருட்டுத்தனமாக 500 க்கு மேற்பட்ட வட இந்தியர்களை வரவழைத்து கிரேடு-3 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வேலையை உடனே நிறுத்த கோரியும்
நாம் தமிழர் கட்சி சார்பாக அன்று (08-08-2020) மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.