கொரோனா தடுக்கும் பொருட்டு கபசுர குடிநீர் வழங்குதல் – ஆலங்குளம் தொகுதி

6

(2.8.2020 ஞாயிறு) ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பில் கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து எப்படி தற்காத்து கொள்வது, கபசுர குடிநீர் அருந்தும் அளவு மற்றும் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை கொள்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம் பிரதிகள் கொடுக்கப்பட்டது.

களப்பணி முடிந்ததும் கல்லூத்து கிராமத்தில் இருந்து நாம் தமிழர் கட்சியில் தங்களை புதிதாக இணைத்துக்கொண்ட 20 உறவுகளுடன் கலந்தாய்வு நடந்தது. நாம் தமிழர் கட்சியின் அடிப்படை கொள்கைகள், நாம் தமிழர் கட்சியில் இருக்கும் பாசறைகள், மாற்று கட்சியில் பயணிப்பவர்களிடம் கருத்து ரீதியிலான முரண்பாடுகளை எப்படி எதிகொள்வது போன்றவை கற்பிக்கப்பட்டது. கல்லூத்து கிராமத்தில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்றவை விவாதிக்கப்பட்டன.

நிகழ்வினை கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் உறவுகள் ஏற்பாடு செய்திருந்தனர்.