கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – புதுச்சேரி

6

புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் கொரானா என்னும் கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த *கபசுர குடிநீர், முதலியார்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது. முதலியார்பேட்டை தொகுதி தலைவர் மோகன் தலைமையில் தொகுதி செயலாளர் செந்தமிழன் ஒருங்கிணைத்தார். நிகழ்வு ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளர்கள் கிருஷ்ணகுமார் செந்தில்குமார் வரலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் அருள்தாஸ் அருந்தமிழ் முருகராஜ் பொன்ராஜ் பொற்செழியன் சீனிவாசன் கார்த்தி மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.