மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு- தூத்துக்குடி

17

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்கட்சி சார்பில் ஆங்கில படைகளின் ஆயுதகிடங்கை அழிக்க தன் உடலில் வெடிகுண்டுகளுடன் பாய்ந்து வெடிக்க செய்து தன் தாய் நிலத்தை காக்க தன் உயிரையே தந்த மாவீரன் சுந்தரலிங்ககுடும்பனார் அவர்களுக்கும்
அதே போரில் தீரத்துடன்  ஆங்கிலேயர்களுடன் போரிட்டு  போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த பகதூர் வெள்ளையத்தேவர் அவர்களுக்கும் தலைநகர் சென்னையில் சிலை வைக்க தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.