புதுச்சேரி முதல்வரிடம் மனு- மகளிர் பாசறை – புதுச்சேரி

23

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சூழலில் *மகளீர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனியார் நிதியகங்களின்* மூலம் பெற்ற கடன் தொகையை நடப்பு மாதத்தில் செலுத்த வற்புறுத்தும் தனியார் நிதி நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணித்து உடனடியாக புதுச்சேரி அரசு முறைப்படுத்த வேண்டி புதுச்சேரி *நாம் தமிழர் கட்சி* சார்பில் – *புதுச்சேரி மாநில முதல்வர் ஐயா.திரு.நாராயணசாமி* அவர்களை சந்தித்து *புதுச்சேரி மாநில செயலாளர் திரு.முத்.அம்.சிவக்குமார்* தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 
கோரிக்கை மனுவை *உருளையன்பேட்டை தொகுதி மகளிர் பாசறை பொருப்பாளர்கள் மற்றும் புதுச்சேரி மாநில மகளிர் பாசறை செயலாளர் ப.கௌரி, தொழிற்சங்க பாசறை செயலாளர் திரு.ரமேசு* இவர்களுடன் இணைந்து *உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் திரு.கருணாநிதி* அவர்களின் ஒத்துழைப்புடன் *புதுச்சேரி மாநில செய்தி தொடர்பாளர் வே.திருமுருகன்* மற்றும் *அனைத்து தொகுதி முதன்மை பொருப்பாளர்களின்* முன்னிலையில் முதல்வரிடம் வழங்கப்பட்டது.
மனுவை பெற்றுக் கொண்ட *புதுச்சேரி மாநில முதல்வர் திரு.வே.நாராயணசாமி* அவர்கள் இந்த சூழ்நிலையை கருத்தில் ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த கோரிக்கையை ஏற்பதாகவும் உறுதியளித்தார்.