சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்- விருதுநகர்

30

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான அப்பாவி தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை போன, அதனை மறைக்க உடந்தையாக இருந்தவர்களின் மீதும் கொலைவழக்கு பதிவு செய்து, உடனடியாக கைது செய்து, சிறையடைப்பு செய்யவும், இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் 29.6.2020 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது அதன் ஊடாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.