கபசுர குடிநீர் வழங்குதல் – பண்ருட்டி

18

நாம் தமிழர் கட்சி – மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி சார்பில் இன்று 08.07.2020 காலை 8.00 மணி முதல்
கொரோனா நோய்க்கு எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மேல்பட்டாம்பாக்கம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயலாளர் முகமது பாரூக் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் மகாதேவன், நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சிவசந்திரன், தொகுதி இளைஞர் பாசறை துணை செயலாளர் அருண், பண்ருட்டி நகர பொருளாளர் (கிழக்கு) நிஜாமுதீன், பெருமாள்நாயக்கன்பாளையம் ஒருங்கிணைப்பாளர் ஹாரிஸ் முகமது, வினோத், பிரசாந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பதிவு : அ. வெற்றிவேலன், பண்ருட்டி தொகுதி செயலாளர். தொடர்புக்கு : 9345617522

முந்தைய செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்க நிகழ்வு – பண்ருட்டி
அடுத்த செய்திமுக்கிய அறிவிப்பு: