லடாக்கில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனிக்கு வீரவணக்கம்! – சீமான்

48

இந்திய – சீன எல்லைப்பகுதியான லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பாதுகாப்புப் பணியின்போது எதிரிகளுடனான மோதலில் இராமநாதபுரம், கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த தம்பி பழனி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டு. அவர்களது துயரத்தில் பங்கேற்கிறேன்.

வீரத்திருமகன் தம்பி பழனியின் ஈடுஇணையற்ற வீரத்திற்கும், ஈகத்திற்கும் எமது வீரவணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி