மணல் கொள்ளையை தடுக்க ஆதாரங்கள் திரட்டி ஆட்சியரிடம் புகார்

62

*அம்பிளிக்கை ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிமார் கோவில் குளத்தில் நீண்ட நாட்களாக மெகா மண் திருட்டு நடைபெற்று வருகிறது.. இதனை அடுத்து உள்ளூர் மக்கள் தந்த தகவலின் பேரில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொருப்பாளர்கள் சம்பந்தப்பட்ட குளத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தோம்..நீர் சேகரிப்பிற்கான தகுதியை அந்த குளம் இழக்கும் அளவிற்கு அதிகமாக மண் திருட்டு நடைபெற்றது அப்பட்டமானது.‌தற்போது இந்த பதிவினை உங்களுக்கு அனுப்பும் நேரத்தில் கூட ஒரு ஜே சி பி இயந்திரத்தை கொண்டு டிப்பர் லாரி மூலம் மண் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது..இதற்கான ஆவணங்களை புகைப்படங்கள் மற்றும் காணொலிகளாக பதிவு செய்துள்ளோம்..அதனை உங்களுக்கு பகிர்கிறோம்.. மேற்படி சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது எந்தவித தயவுதாட்சனையும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி*


முந்தைய செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- வேலூர் மாவட்டம்
அடுத்த செய்திபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-செங்கல்பட்டு தொகுதி