மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல் – திருநெல்வேலி

53

#மாணவர்_பாசறை_சார்பாக_மாவட்ட_ஆட்சியாளர்_அவரிடம்_மனு / நாம் தமிழர் கட்சி

மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழும், மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது!

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர் ஒன்றியத்தில் உள்ள பெரிய குளத்தில் 50க்கும் மேற்பட்ட #பனைமரங்களை_தனியார்_காற்றாளை_நிறுவனம்_வெட்டி_இருக்கிறது அதற்க்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
எதைக் கேட்டாலும் கொடுக்கின்ற மரம் பனை. பனை ஓலை,நுங்கு, பதனீர், பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை விசிறி, பனையிலிருந்து செய்யப்படும் சாமான்கள் எனப் பல வகைகளில் பயன்படுத்தக்கூடிய பொருள்களையே வழங்கும் #பனை_மரம்_தமிழகத்தின்_கற்பக_விருட்சம்.
அந்தக் பனை கடந்த 50 ஆண்டுகளில் அளவுக்கு அதிகமான சேதங்களைச் சந்தித்துவிட்டது. கணக்கிட முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது. இப்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது.
அதனால் பனை மரங்களை வெட்டுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மாணவர் பாசறை செயலாளர்
திரு.மாரியப்பன் (எ) மாரீஸ்
9384257993
நாம் தமிழர் கட்சி
மாணவர் பாசறை
நெல்லை சட்டமன்ற தொகுதி

முந்தைய செய்திமாநில சுயாட்சி உரிமையை பறித்து கொள்ளும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு  இல்லையா? – சீமான் கேள்வி