பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் ஊராட்சிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம்

27

கலந்தாய்வு கூட்டம்
நேற்று திட்டமிட்டபடி 09/8/2019 தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சிகள் இணைந்து கண்.இளங்கோவன், சேசு ராஜா மற்றும் நிக்ஷன் பிரபு ஆகியோர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,

1. ஒவ்வொரு மாதமும் நாம் தமிழர் உறவுகள் ரூபாய் 50 மாத சந்தா செலுத்த வேண்டும் எனவும்,

2.20 நாள்கள் இடைவெளியில் தங்கச்சிமடம் கிளை சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும்,

3.நான்கு பனை கிராமம் செல்லும் சாலையை சரி செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சுவரொட்டி ஒட்டுவது எனவும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.