கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி

8

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதியின் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. எருமப்பட்டியில் 29.03.20 தொடங்கி 01.04.20 வரையிலும், மேலும் 07.04.20 தொடங்கி 10.04.20 வரையிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சீராப்பள்ளியில் 01.04.20 அன்றும், முத்துக்காப்பட்டியில் 03.04.20 முதல் 07.04.20 வரையிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. பொட்டிரெட்டிப்பட்டியில் 21.04.20 தொடங்கி 25.04.20 வரையிலும், தேவராயபுரத்தில் 28.04.20 முதல் 30.04.20 வரையிலும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. கோணங்கிப்பட்டியில் 25.04.20 அன்றும் சேந்தமங்கலம், அண்ணா நகர், பெரியகுளம் ஆகிய பகுதிகளில் 01.05.20 முதல் 04.05.20 வரையிலும், நாமகிரிப்பேட்டையில் 11.05.20 அன்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.