கொரோனா நலத்திட்ட உதவி

10

அன்பான உறவுகளுக்கு வணக்கம் முதலியார்பேட்டை தியாகு முதலியார் நகர் வீட்டு வசதி குடியிருப்பில் வசித்து வருபவர் வத்சலா வேல்முருகன் கணவனை இழந்து விட்ட இவர் தற்போது மிகவும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்டுள்ள நாடடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சாப்பாட்டிற்கே சிரமப்படும் நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது எனவே இவர் நம்மிடம் உதவி கேட்டதற்கிணங்க உறவுகளிடம் தங்களால் முடிந்த உதவியை பணமாகவோ பொருளாகவோ கொடுக்கும்படி கேட்டிருந்தோம். இதனை அடுத்து கட்சி உறவுகளின் பங்களிப்பாக ரு. 2600 கிடைத்தது. அதனால் அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருள்களும் வாங்கி அளிக்கப்பட்டது.