கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு – நத்தம்

9

அறிவிப்பு

நத்தம் சட்டமன்றத் தொகுதி

நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..

தற்போதைய இந்த கொரனோ வைரஸ் காலகட்டத்தில் நமது தொகுதி உறவுகள் சார்பாக அனைத்து ஒன்றிய பகுதிகளிலும் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் கபசுரக் குடிநீர் கொடுத்து வருகின்றோம் அதனுடைய அடுத்தகட்ட நிகழ்வாக வருகின்ற *ஞாயிற்றுக்கிழமை 14.6.2020 காலை 10 மணியளவில் நத்தத்தில் உள்ள நமது கட்சி அலுவலகத்தில் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது..

(நமது கட்சி அலுவலகத்திலிருந்து நத்தம் வட்டாட்சியர் அலுவலகம் வரை உள்ள சாலையோர கடை வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்குவது).

எனவே நத்தம் சட்டமன்றத் தொகுதியை சார்ந்த அனைத்து உறவுகளும் தவறாமல் இதில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
அனைத்து நிலை பொறுப்பாளர்கள்,
நத்தம் தொகுதி

செய்தி வெளியீடு
கண்ணன்
செய்தி தொடர்பாளர்
நத்தம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி
தொடர்பு எண் : 9677270791