பிரான்சு நாம் தமிழர் பிரான்சு மருத்துவமனை ஊழியர்கள் செவிலியர்களுக்கு மற்றும் ஈழ உறவுகளுக்கு உதவி

32

நாம் தமிழர் பிரான்சு கிளை சார்பாக 15 நாட்களுக்கு மேல் தங்கள் குடும்பத்தை நேரில் பார்க்காமல்  தங்கள் உயிரை துச்சமாக மதித்து  பணியாற்றிவரும்  போண்டி மருத்துவமனை ஊழியர்களுக்கு  (மருத்துவர், செவிலியர் மற்றும் துப்புரவு ) உணவு வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து ஏனைய மருத்துவமணையில் பணி புரியும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் தாதியர்களுக்கு உதவி வழங்க முடிவு செய்துள்ளனர் உங்களால் முடிந்த உதவியினை வழங்க நாம் தமிழர் பிரான்சு உறுப்பினர்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
மற்றும் நாம் தமிழர் பிரான்சு கிளையினால்
இதுவரைக்கும் அனுப்பப்பட்ட பணத்திலிருந்து மட்டக்களப்புக்கு. 1 இலட்சம் ரூபாயும் வன்னிக்கு 2 இலட்சம் ரூபாயும் யாழ்ப்பாண மணியந்தோட்டத்துக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டுவருகிறது.
நாம் தமிழர் பிரான்சு