நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, கொரோனா நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நிவாரண பொருட்கள் வழங்கிட நிதி சேகரிப்பின் போது,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள சிவந்திபுரத்தை சேர்ந்த தங்க மகள் *ஶ்ரீநதி* தனது 10வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கொரோனா நிவாரண பொருட்கள் மக்களுக்கு வழங்கிடுமாறு, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 3500/-ஐ அம்பை சட்டமன்ற தொகுதியின் இணைசெயலாளர் திரு.பா.ஆரோக்கிய ஜெகன் அவர்களிடம் வழங்கினார் அந்த பணத்தில் மளிகை பொருட்கள் வாங்கி மக்களுக்கு வழங்கப்பட்டது ஶ்ரீநதி-க்கு நாம்தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, *திருக்குறள்* புத்தகம் வழங்கி பாராட்டினர்.