ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கோரிக்கை

100

ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு சீமான் கோரிக்கை

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஈரானில் மீன்பிடி தொழிலுக்காகச் சென்று சிக்கித்தவிக்கும் 700க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் உணவுகூட இன்றி அல்லலுறும் செய்திகேட்டு பெரும் துயருற்றேன். அம்மீனவர்களின் குடும்பத்தினரும் பெரும் கலக்கமடைந்து செய்தவறியாது இருக்கின்றனர்.

ஆகவே, மத்திய வெளியுறவுத்துறை உடனடியாக ஈரான் நாட்டு இந்தியத் தூதரகம் வாயிலாக அம்மீனவர்களைத் தொடர்புகொண்டு உதவி போர்க்கால அடிப்படையில் உடனடியாக மீட்டுத் தாயகம் கொண்டு வர நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளைக் கோருகிறேன்.

#RescueTamilfishermen

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமருத்துவ முகாம்-தாம்பரம் சட்டமன்றத் தொகுதி 
அடுத்த செய்திகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருவிடைமருதூர் தொகுதி