தலைவர் பிறந்த நாள் விழா:குருதி கொடை முகாம்-பாபநாசம்

5
தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், மாவீரர்களின் நினைவை போற்றும் வகையிலும்  24/11/2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அய்யம்பேட்டை ஜி ஏ ஆர் மகால் இல் மாபெரும் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
நிகழ்வை தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர் ஐயா கிருட்டிணகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக
மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஹிமாயூன் கபீர் அவர்களும்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்  மணி.செந்தில் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
குருதி கொடுத்த உறவுகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.