விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குத் துணை நில்லுங்கள்! 

198

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் இடைத்தேர்தல் வெற்றிக்குத் துணை நில்லுங்கள்!

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் வழமைபோல மக்களையும், மகத்தானத் தத்துவத்தையும் நம்பி தனித்துக் களமிறங்குகிறது நாம் தமிழர் கட்சி. நமது கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடர் பரப்புரை நடைபெற்றுவருகிறது.
இரு பெரும் திராவிடப் பூதங்களானத் திமுகவும், அதிமுகவும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கிறது. இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக, நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து, அதன்மூலம் வாக்குகளைப் பெற்று சனநாயகத்தை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்றுறுதி கொண்ட, தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டு அரசியல்படுத்தப்பட்ட ஒரு இளையோர் கூட்டம் எவ்வித எதிர்பார்ப்புமற்று மாற்று அரசியலுக்காய் நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குத் தோள்கொடுத்து உதவ வேண்டியதும், ஒரு நல்லரசியல் துளிர்விட துணைநிற்க வேண்டியதும் சனநாயகப்பற்றாளர்களின் தலையாயக் கடமையாகும்.
எவ்விதப் பின்புலமும் இல்லாத எளிய மனிதர்களால் கட்டப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிற மக்கள் இராணுவமான நாம் தமிழர் கட்சி எனும் பாதுகாப்புப் பெரும்படையை வளர்த்து வலிமையடையச் செய்ய ஒவ்வொருவரும் தங்களால் இயன்றப் பங்களிப்புகளைச் செய்ய முன்வர வேண்டும். எவ்விதத் தத்துவ தடம்பிறழ்வோ, கொள்கை சறுக்கலோ, அரசியல் சமரசமோ எதுவுமற்று நன்னெறியோடு நேர்மையானப் பாதையில் நாம் தமிழர் கட்சி பயணித்தாலும் எப்போதும் பொருளாதார நெருக்கடியே நமது செயற்பாட்டை மட்டுப்படுத்துகிறது. வளர்ச்சியில் ஒரு தேக்கநிலையை உருவாக்குகிறது. பொருளாதாரப் பலமும், ஊடக வெளிச்சமும் மட்டும் நம்மிடம் இருந்திருந்தால் நாம் அடைந்திருக்கிற வளர்ச்சியைவிடப் பன்மடங்கு வளர்ச்சியை அடைந்திருப்போம் என்பது எவராலும் மறுக்கவியலா உண்மை.
தற்போதைய இடைத்தேர்தல் பரப்புரையில்கூட வாகனங்களுக்கான எரிபொருள், உணவு, தங்குமிடம், மேடை, ஒலிவாங்கி, ஒலிப்பெருக்கி போன்ற இன்றியமையா அடிப்படைச் செலவுகளுக்கே பணமின்றி அல்லாடிக் கொண்டிருக்கிறோம்.
‘விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு. தன்னலம் கருதாமல் வசதி படைத்தோர் வசதியற்றோருக்கு உதவ வேண்டும். இது ஒரு தேசிய நெருக்கடி. இந்த நெருக்கடியில் பிறக்கும் துன்பத்தை முழுத் தேசிய இனமுமே பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்தத் தேசியச் சுமையைச் சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது எமது தேசத்திற்கு செய்யும் துரோகம்’ எனும் நமது தேசியத் தலைவரின் புனிதக்கூற்றுக்கிணங்க, இத்தேசியக் கடமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.
ஆகவே, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத்தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என உள்ளன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.
Donate-Us
‘துளி’ திட்டம்:

கட்சியின் வளர்ச்சிப்பணிகளுக்காக மாதந்தோறும் குறைந்தபட்சம் 1,000 நபர்களிடமிருந்து 100 முதல் 1,000 ரூபாயை  திரட்டுவதுதான் இதன் வேலைத்திட்டம். நாம் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை வளர்ச்சி நிதியாக அளித்து இத்திட்டத்தினைச் செயலாக்கம் செய்வதன் மூலம் நம் கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பொருளாதார நெருக்கடியினை நம்மால் முழுமையாக அகற்றிவிட முடியும்.
துளித்துளியாய் இணைவோம்; பெருங்கடலாகும் கனவோடு!
வங்கி கணக்கு விவரம் :
Account Name: Naam Tamilar Katchi
Bank Name: Axis Bank
Account Number: 916020049623804
IFSC code: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
Branch: No. 442, Poonamallee High Road, Maduravoyal, Chennai-600095
 UPI / Google Pay / PhonePe / AmazonPay : 9092529250@ybl
https://join.naamtamilar.org
 உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம்கட்சி வளர்ச்சி நிதி வழங்குவது எப்படி..?
நாம் தமிழர் உறவுகள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கை செயலியில் (https://join.naamtamilar.org) தங்களது உறுப்பினர் எண் மற்றும் கடவுச்சொல் மூலமாக உள்நுழைந்து கட்சி வளர்ச்சி நிதி என்ற பக்கத்தில் சென்று தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை கட்சி வளர்ச்சி நிதியாக வழங்கியதும் பணம் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் பொருட்டு பணப் பரிமாற்ற விவரங்களுடன் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் நீங்கள் ஒவ்வொரு முறை செலுத்தும் சிறு தொகையும் உங்கள் உறுப்பினர் பக்கத்தில் சேமித்துவைக்கப்டும்.
வங்கி கணக்கிற்குப் பணம் செலுத்தியவர்கள் அதற்கான பணப்பரிமாற்ற எண் / பற்றுச்சீட்டு நகலை thuli@naamtamilar.org / ntkthuli@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.
தொடர்புக்கு:
கா.சாரதிராஜா +91-9500767589 (தலைமை அலுவலக நிர்வாகி)
கு.செந்தில்குமார் +91-9600709263 (தலைமை நிலையச் செயலாளர்)
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு