முக்கிய அறிவிப்பு: பேரரசன் பெருவிழாக் குழு கலந்தாய்வு – திருச்சி

26

முக்கிய அறிவிப்பு
வீரத்தமிழர் முன்னணி சார்பாக பேரரசன் அருண்மொழிச்சோழன் பெருவிழா வருகின்ற அக்டோபர் 5 ஆம் நாள் தஞ்சையில் மிக எழுச்சியாக கொண்டாடப்பட இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிற இந்த மாபெரும் விழாவில் உலகம் முழுவதிலிருந்தும் வருகை தர இருக்கிற அறிஞர் பெருமக்கள் தங்களது வரலாற்றுப் பேருரையை ஆற்ற இருக்கிறார்கள். நிகழ்வின் நிறைவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், நமது பெருமைக்குரிய பாட்டனார் மாமன்னர் அருண்மொழிச்சோழன் பற்றியப் புகழுரையை ஆற்ற இருக்கிறார். வரலாற்றில் இதுவரை நடந்திராத அளவிற்கு மிக எழுச்சியாக நடைபெற இருக்கின்ற இப்பெருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கு சீமான் அவர்கள் பெருவிழா குழுவொன்றினை அமைத்துள்ளார்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெருவிழா குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நாளை (15-09-2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் திருச்சி புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கக்கூடிய அருண் உணவகம் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. அச்சமயம் பெருவிழா குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் வருகை தந்து தங்களது மேலான கருத்துக்களைத் தந்து நிகழ்வு சிறக்க உதவிட வேண்டுகிறோம்.
தொடர்புக்கு: முனைவர் செந்தில்நாதன் 94422 48351

முந்தைய செய்திஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திமாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு | பெரம்பூர்