புதுச்சேரி காமராஜர் நகர் வேட்பாளர் பிரவினா மதியழகன் வேட்புமனு தாக்கல்

60

செய்திக்குறிப்பு: புதுச்சேரி காமராஜர் நகர் வேட்பாளர் பிரவினா மதியழகன் வேட்புமனு தாக்கல்  | நாம் தமிழர் கட்சி

புதுச்சேரியில் எதிர்வரும் 21-10-2019 அன்று நடைபெறவிருக்கும் காமராஜ்நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும்  வேட்பாளர் பிரவினா மதியழகன் நேற்று (27-09-2019) வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

 

 

 

 

 

 

 

 

நாம் தமிழர் கட்சியின் உறுதிமொழியேற்று புதுச்சேரி நாம் தமிழர் உறவுகளுடன் பேரணியாகச் சென்று காமராஜ்நகர் தொகுதி தேர்தல் அதிகாரி அவர்களிடம் வேட்புமனு வழங்கினார். உடன் மாநில ஒருங்கிணைபாளர்கள் முத்.அம்.சிவக்குமார், கடல்தீபன் மற்றும் புதுச்சேரி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

வேட்பாளர் பற்றிய சிறுகுறிப்பு:

பிரவினா மதியழகன், குத்தூசி மருத்துவப் பட்டயப்படிப்பு முடித்துள்ளார். 10 வருடங்களுக்கு மேலாக மகளிர் சுய உதவிக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்டுவருகிறார். பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்கி வருகிறார்.