ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 01.09.2018 காலை 8 மணி முதல் மாலை 3.00 மணி வரை கிளை இல்லா கிராமம் உருவாக்குகின்ற நோக்கத்தில் பாகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்க சாதன பள்ளி, பூபன் பள்ளி, தாளப் பள்ளி, பெளத்தூர் ஆகிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீடு வீடாக சென்று துண்டறிக்கையை வழங்கி நாம் தமிழர் கட்சியின் வரைவு அறிக்கையை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தனர் இதில் மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர்கட்சியை சார்ந்த ஜெகதீஷ், சிரிகந்தராசா, கதிரேசன், சற்குண பாண்டியன், மற்றும் கணபதி, வெங்கடேஷ், முனிராஜ், ராஜ்குமார் மற்றும் உமேஷ் பவன் மற்றும் பலர் களமாடினர்.