வால்பாறை நாம் தமிழர் கட்சி பெரியார் நகர் கிளை கலந்தாய்வுக் கூட்டம் 22.9.2019 அன்று நடைபெற்றது இதில் புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேலும் ஏற்கனவே கட்சியில் இணைந்த பெரியார் நகர் உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது..
கலந்தாய்வுக் கூட்டத்தில் எஸ்டேட் பகுதிகளில் வேலை செய்து ஓய்வுபெற்ற அந்தப் பகுதி தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்திடம் இருந்து வரவேண்டிய கிராஜுவிட்டி கிடைக்காமல் இருப்பது தொடர்பாக நம்மிடையே கோரிக்கை வைத்துள்ளனர் நமது தொழிற்சங்கம் சார்பாக இதை முன்னெடுத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து வால்பாறை நாம் தமிழர் கட்சி ஆளூசித்து விரைவில் தீர்வு காண்பது என முடிவெடுக்கப்பட்டது.