அறிவிப்பு: பனைத் திருவிழா 2019 ஒரு நாளில் பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு

44

அறிவிப்பு: பனைத் திருவிழா 2019
ஒரு நாளில் பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு

நாம் தமிழர் கட்சியின் பத்தாண்டு பசுமைத்திட்டம் மற்றும் பல கோடி பனைத் திட்டங்களின் முன்மாதிரி முன்னெடுப்பாக தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கில் பனை விதைகளை விதைக்கும் பணிகளை நம் உறவுகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதன் நீட்சியாக, தமிழகம் முழுவதும் வருகின்ற 08-09-2019 ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே நாளில் பத்து இலட்சம் பனைவிதைகளை நடவு செய்யும் நிகழ்வினை, பனைத்திருவிழாவாக சுற்றுச்சூழல் பாசறை கொண்டாடவிருக்கிறது.
இதனையொட்டி 08-09-2019 காலை 09 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட, கோவிலம்பாக்கம் ஊராட்சியிலுள்ள நாராயணபுரம் ஏரியில் பனைகளை விதைத்து இந்நிகழ்வை தொடங்கி வைக்கவுள்ளார்.
இதேபோன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் பனை விதைக்கும் நிகழ்வுகளில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பங்கேற்று நிகழ்வை சிறப்பிக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபனை விதைகள் சேகரிப்பு-பல்லடம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு சுற்றுப்பயண அட்டவணை