அரசு அலுவலர் நியமிக்க-மதுபானக்கடை மூட மனு.விருதுநகர்

55

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி பேரூராட்சிக்கு கடந்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு மேலாக செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை செயல் அலுவலர் நியமனம் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் சுகாதாரம் போன்றவை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ள காரணத்தினால் உடனடியாக மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் மம்சாபுரம் ராஜபாளையம் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடை உச்சநீதிமன்றம் மற்றும் அரசு விதிகளுக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதோடு அப்பகுதியில் வாழும் பெண்களுக்கும் அப்பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்று வரும் பெண் குழந்தைகளுக்கும் ஒரு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ள காரணத்தினால் மேற்படி அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட பொருளாளர் பிரபாகரன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இதில் நகரச் செயலாளர் சுபாஷ், மம்சாபுரம் தலைவர் தங்கம் மாரியப்பன்,முருகன்,முருகேசன், கணேஷ் ராஜ்,சௌந்தரபாண்டியன்,சுரேஷ் கண்ணன்,காளிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.