அறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | வீரத்தமிழர் முன்னணி

685

அறிவிப்பு: அக்-05, பேரரசன் பெருவிழா (இராசராசசோழன் பெருவிழா) – நிகழ்ச்சி நிரல் | நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணி

பண்பாட்டு புரட்சி இல்லாது; அரசியல் புரட்சி வெல்லாது! என்ற முழக்கத்தோடு தமிழர் மெய்யியல் மீட்சிக்கான களப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நமது பாட்டன் அரசருக்கு அரசன் அருண்மொழிச்சோழன் (இராசராசசோழன்) பெரும்புகழைப் போற்றும் விதமாக வருகின்ற அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி (சனிக்கிழமை), தஞ்சாவூர் புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் ‘பேரரசன் பெருவிழா’ பேரெழுச்சியாக கொண்டாடப்படவிருக்கின்றது.

பெருவிழா நிகழ்வுகள்:

பசுமைச்சுடர் பயணம்: உடையாளூரில் இராசராசசோழன் நினைவிடத்தில் இருந்தும், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இருந்தும், இராசராசசோழன் சுடர் காவிரி சமவெளியைப் பாதுகாக்கும் பசுமைச்சுடர் பயணமாக புறப்பட்டு பெருவிழா திடலை வந்தடையும்.

புகைபடக் கண்காட்சி: பெருவிழா திடலில் சோழர்களின் பொற்கால ஆட்சி பற்றிய புகைபடக் கண்காட்சி நடைபெறும்

கலைநிகழ்ச்சிகள்: தமிழர்களின் போர்க்கலைகள், வீரவிளையாட்டுகள், பாரம்பரிய பறையிசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

பெருவிழா கொடியேற்றம்: வீரத்தமிழர் முன்னணி கொடியேற்றம், சோழனின் புலிக்கொடியேற்றம், தமிழ்நாட்டுக் கொடியேற்றம் நடைபெறும்

பெருவிழா இதழ் வெளியீடு: சோழர்களின் ஆட்சியில் நடந்த சமூக சீர்திருத்தங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை ஆய்வாளர்களிடமிருந்து பெற்ற கட்டுரைகளைத் தொகுத்து பெருவிழா இதழ் வெளியீட்டு நிகழ்வு நடைபெறும்.

பெருவிழா பேருரை:

ஆசிரியர் சபரிமாலா

ஆய்வர் யோகராசு (மலேசியா)

தமிழ்திரு. வில்லியம் சா (மலேசியா)

பேராசிரியர் ஜக்மோகன் சிங் (பஞ்சாப்)

பேராசிரியர் கிளைடு விண்டர் ( சிகாகோ, அமெரிக்கா)

பேராசிரியர் இறைநெறி இமையவன் (வரலாற்று ஆய்வாளார்)

பேராசிரியர் சி.கோ.தெய்வநாயகம் (முன்னாள் யுனெஸ்கோ இயக்குநர்)

பேராசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியம்

பேராசிரியர் மா.சோ.விக்டர்

தமிழ்திரு. பெ.மணியரசன் ( தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் )

பெருவிழா நிறைவுரை:

செந்தமிழன் சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

இப்பெருவிழாவை மிகச்சிறப்பாக நடத்திடும் பொருட்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் பெருவிழாக் குழு அமைக்கப்பட்டு களப்பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

எனவே தொகுதிவாரியாக, மாவட்டவாரியாக, மண்டலவாரியாக, குறிப்பிட்ட பாசறைவாரியாக, புலம்பெயர் நாடுகளில் உள்ள நாம் தமிழர் பாசறைவாரியாக, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை இப்பெருவிழாவிற்கு உதவிட வேண்டுகிறோம்.

கட்சி வங்கி கணக்கு விவரம் :
Account Name: நாம் தமிழர் கட்சி – Naam Tamilar Katchi
Bank Name: Axis Bank
Account Number: 916020049623804
IFSC code: UTIB0002909
MICR Code: 600211076
SWIFT Code: CHASUS33
Branch: No. 442, Poonamallee High Road, Maduravoyal, Chennai-600095
இணையதளம் வாயிலாக வழங்க: https://www.naamtamilar.org/donate-us/

வீரத்தமிழர் முன்னணி வங்கி கணக்கு எண் :

Account Name : வீரத்தமிழர் முன்னணி அறக்கட்டளை –  VEERATHAMIZHAR MUNNANI ARAKATTALAI
Account Number : 10043209124
Bank Name : IDFC Bank
Branch Name : Nungambakkam
IFSC Code : IDFB0080102
Bank Adds : IDFC Bank Limited, No.105, Tahera Manor, Nungambakkam High Road, Nungambakkam, Chennai – 600034

வங்கி கணக்கிற்குப் பணம் செலுத்தியவர்கள் அதற்கான பணப்பரிமாற்ற எண் / பற்றுச்சீட்டு நகலை vtmntk@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 94422 48351 என்ற பகிரி எண்ணுக்கு அனுப்பி வைக்கவும்.

தமிழகம் முழுமைக்கும் இருக்கும் நாம் தமிழர் உறவுகள் இப்பெருவிழா பற்றிய செய்தியை தங்கள் பகுதியில் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டிகள் மூலமாக மக்களிடம் கொண்டுசேர்த்து பேரரசன் பெருவிழாவிற்கு அவர்களையும் அழைத்துவர வேண்டுகிறோம்.

நிகழ்வு ஒருங்கிணைப்பு:
வீரத்தமிழர் முன்னணி மற்றும் நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலம்

தொடர்புக்கு: முனைவர் செந்தில்நாதன் 94422 48351, மாநில ஒருங்கிணைப்பாளர், வீரத்தமிழர் முன்னணி


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘காவிரிச்செல்வன்’ பா.விக்னேசு 3ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திசுற்றறிக்கை: பேரரசன் பெருவிழா ஏற்பாடு குறித்த மாநிலக் கலந்தாய்வு