பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்- பள்ளிகளுக்கு உதவி

29
15/07/2019 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக பாரத மிகுமின் நிறுவன (B.H.E.L) வளாகத்தில் உள்ள கர்ம வீரர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து  காலை 10 மணியளவில் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மிகவும் ஏழ்மையான 65 குழந்தைகள் படிக்கும் அரசு  ஆரம்பப்பள்ளிக்கு  கல்வி சீர் கொடுக்கும் நிகழ்வு மிக சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேவையான
1) பள்ளியின் பெயர் தாங்கிய பதாகை
2) குழந்தைகள் அமரும் இருக்கைகள்
3) 300 க்கும் மேற்பட்ட குறிப்பேடுகள்
4) காலணிகள் மற்றும் காலணி உறைகள்
5) புதன்கிழமை அணியும் வண்ணச்சீருடை
6) எழுதுகோல்
ஆகியவை வழங்கப்பட்டது.