கலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி

20
கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்
30.6.2019  நாம் தமிழர் கட்சி சார்பாக  கோவில்பட்டி நகர & ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் கோவில்பட்டி புதுரோடு எஸ்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பின்வருமாறு :
 எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் நமது கட்சியின் சார்பாக பங்கேற்பது குறித்தும்,
கோவில்பட்டி நகரத்தில் உள்ள 36 வார்டுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிப்பது.
ஒன்றிய பகுதிகளில் கிளை பொறுப்பாளர்களை நியமித்து கிளைபகுதிகளில் வலிமையான கட்டமைப்பை ஏற்படுத்துவது.
கோவில்பட்டி தொகுதிக்கென்று அலுவலகம் அமைப்பது.
அருந்தமிழர் அரசு ஊழியர் நலச்சங்கத்திற்கு நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அரசு மற்றும் தனியார் துறையை சார்ந்த நபர்களை உறுப்பினர்களாக இணைப்பது என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.