கலந்தாய்வு கூட்டம்-ஒசூர் தொகுதி

16

கடந்த 30/06/2019 ஞாயிற்றுக்கிழமை கிருட்டிணகிரி மேற்கு மாவட்ட கலந்தாய்வு ஓசூர் ஆந்திர சமிதி அரங்கில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நடந்து முடிந்த ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் கிருட்டிணகிரி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றியும், ஓசூர் மற்றும் தளி சட்டமன்றத்தொகுதிகளில் அடுத்து முன்னெடுக்க வேண்டிய செயல் திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

கலந்தாய்வில் ஓசூர் மற்றும் தளி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஓசூர் சுற்று சூழல் பாசறையின் சார்பாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.