எழுவர் விடுதலை உறுதி | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

776

எழுவர் விடுதலை உறுதி – கால்நூற்றாண்டு காலக் கண்ணீர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

  • முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயாஸ் இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரும் இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து விட்டார்கள். சிறையில் நன்நடத்தை மதிப்பையும் பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் விடுக்க முடியா அரசியல் சதிராட்டத்தில் சிக்குண்டுத் தவிக்கிறார்கள். இங்கே சட்டமும் கருணையும் அனைவருக்கும் ஒன்றாக கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
  • தி.மு.க. அதிகாரத்தில் இருந்தபோது, பல ஆயுள்தண்டனைக் கைதிகளை நன்நடத்தை விதியின் கீழ் விடுதலை செய்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை லீலாவதியைக் கொலைச் செய்த கட்சிக்காரரையும் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்திருக்கிறது தி.மு.க. அரசு. ஆனால் எழுவர் விடுதலையைப் பற்றி சிந்திக்கவில்லை.
  • உலகை உலுக்கிய மும்பைக் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்த பிரபல இந்தித் திரைப்பட நடிகர் சஞ்செய் தத்திற்கு ஐந்தாண்டுகள் தான் சிறைதண்டனை. அதைக்கூட முழுமையாக அனுபவிக்கவில்லை. பாதி நாள்கள் மீள்வரல் உறுதி விடுவிப்பு பெற்று (பரோல்) வெளியே இருந்தார். இப்போது நன்னடத்தை விதியின் கீழ் சுத்தமாக விடுதலை செய்துவிட்டார்கள்.
  • ஆனால் தமிழகச் சிறையில் உள்ள அந்த எழுவரையும் விடுவிக்கத் தடைபோட்டபடி இருக்கிறார்கள்.
  • நாம் தமிழர் அரசு அந்த ஏழுபேர் உட்பட பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள அனைத்து ஆயுள்தண்டனைக் கைதிகளையும் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை வைத்து விடுதலை செய்யுயும். தேவை என்றால் பிறகு சட்டப்போராட்டத்தை நடத்திக்கொள்ளும்.

கால்நூற்றாண்டு காலக் கண்ணீரும் கவலையும் துடைக்கப்படும்.

முந்தைய செய்திகாவல் மக்களுக்கான சேவை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 
அடுத்த செய்திசுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – மதுரை தென் மண்டலம்