தூய்மைப் பொறியாளர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

621

தூய்மைப் பொறியாளர் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு 

மனிதக் கழிவை மனிதர்களே அள்ளுவது கொடுமை அதை மாற்ற வேண்டியது நமது கடமை

  • நவீன அறிவியல் வளர்ச்சி வந்துவிட்ட இக்காலகட்டதிலும், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிநிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இத்தகையான தொழிலாளர்களின் நலனைக் காப்பதாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் பேசிய திராவிடக் கட்சிகள் அம்மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. எனவே இனியும் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் முறை முற்றாக தடை செய்யப்படும். அவர்களுக்கு நவீனக் கருவிகளுடன் 100 விழுக்காடு அரசுப்பணி வழங்கப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சார்ந்தவர்களை மட்டும் தூய்மைப் பொறியாளராகப் பயன்படுத்திவரும் முறை தடை செய்யப்படும்.

உயர்ந்த சம்பளம்

  • தூய்மைப்படுத்தும் பொறியாளராக அனைவரும் பயன்படுத்தப்படுவர். அவர்களுக்கு உயர்ந்த சம்பளம் கொடுக்கப்படும். இதன்மூலம் தூய்மைப் பொறியாளார் பணி பெருமைக்குரிய பணியாகக் கருதப்படும்.
  • நவநாகரிக வாழ்க்கையில் முன்னை விட அதிகமாகக் குப்பைகள் சேர்கின்றது. கழிவுமேலாண்மை என்பது தமிழ் நாட்டில் இன்னும் வளர்ச்சி அடையாமால் இருக்கிறது. கழிவுகளும் குப்பைகளும் சரிவர அகற்றப்படாமல் இருப்பதால் சாலைகளும் தூய்மையற்றுக் கிடக்கிறது, தேங்கிக்கிடக்கும் குப்பையால் தொற்றுநோய்களும் ஏற்படுகிறது.

நச்சுக் கழிவுகள்

  • மக்கும் குப்பைகளைவிட தொழிற்சாலைக் கழிவுகள் மிகவும் அபாயமானது மேலும் நச்சுத்தன்மை உடையது. அது நிலத்தையும் தண்ணீரையும் பாழ்படுத்துகிறது. சுத்தமான நீர் ஓடிக்கொண்டிருந்த சென்னையின் கூவம் ஆறு பாழ்பட்டுப்போனதற்கு பாதித் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்த்தும் காரணம்.

தொழிற்சாலைகளின் கழிவுகளைத் தனியாகப் பிரித்து, அதை மீண்டும் சுத்திகரிப்பு செய்து வெளியிட வேண்டிய கண்காணிப்பு அமைக்கப்படும்.

முதன்மை நாடு

  • கழிவு மேலாண்மையில் உலகத்திலே சிறந்து விளங்குகின்ற நாடு சுவீடன், இந்த நாட்டில் மொத்தக் குப்பைகளிலிருந்து
  • மறுசுழற்சி (25 விழுக்காடு)
  • குப்பையிலிருந்து மின்சாரம் (55 விழுக்காடு)
  • கழிவுகளிலிருந்து உரம் தயாரித்தல் (15 விழுக்காடு)
  • வெறும் 5 விழுக்காடு குப்பைகளை மட்டும் பயன்படுத்துவதில்லை என்ற முறையில் திடக்கழிவுகளைக் கையாண்டு வருகிறது. அந்த முறையை நாம் தமிழர் அரசு செயல்படுத்தும்.

நவீன பாதுகாப்பு உடைகள்

  • தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆறுகளில், நீர் நிலைகளில், பொது இடங்களில் கலக்கப்படும் தொழிற்சாலை நச்சுக்கழிவுகள் கலப்பதை முற்றாகத் தடுப்போம். இதற்கென்று தனிக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.

தேங்கிய கழிவுகளை அகற்றும்போது நச்சுக்காற்று தாக்கித் தொழிலாளர்கள் இறக்கும் அவலம் இனியும் இருக்காது. உயிர் சேதத்தைத் தவிர்க்க இதற்கென்று முழுப்பாதுகாப்புடன் கூடிய உடைகள் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும்.

மறு சுழற்சி முறை

  • குப்பைகளை சேகரிக்கின்ற போது, மக்கும் தன்மையுடையது, மக்காதது, இரசாயண கலவையானது எனத் தரம் பிரித்து எடுக்கும் முறையில் அக்கறை செலுத்தப்படும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான கட்டமைப்பு உருவாக்கப்படும். இப்படிப் பிரித்தாளுவதுதான் கழிவுகளை மறு சுழற்சி செய்வதை எளிமையாக்க முடியும்.
முந்தைய செய்திமரக்கன்று வழங்கும் நிகழ்வு-சிங்காநல்லூர் தொகுதி
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-மேட்டூர் தொகுதி