சல்லிகட்டு விளையாட்டு விழா-எருமப்பட்டி

9

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட எருமப்பட்டியில் 26-02-2019 அன்று மாபெரும் சல்லிகட்டு
விளையாட்டு விழா எருமப்பட்டி சல்லிகட்டு விழா குழு  மூலம் நடத்தப்பட்டது.
இதில் நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தேவராயபுரம்,
போடிநாயக்கன்பட்டி, சாலபாளையம், எருமப்பட்டி பகுதியை சேர்ந்த காளைகள்
மட்டுமின்றி திருச்சி, தம்மம்பட்டி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அழைத்து
வரப்பட்ட 242 காளைகள் பங்கேற்றன. 130 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி, எருமப்பட்டி ஒன்றியதின்  சார்பாக
எருமப்பட்டி சல்லிகட்டு விழா குழுவின் ஒரு  அங்கமாக இருந்து இந்த சல்லிகட்டு
விளையாட்டு விழாவினை  ஒருங்கிணைத்தனர்

விழாவினை ஒருங்கிணைக்க, சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் உறவுகள் செயல்பட்டார்கள்

*எருமப்பட்டி மாபெரும் சல்லிக்கட்டு விழாவில் நாம் தமிழர் கட்சியின் செயல்கள்*

1. மாடு பிடி வீரர்களுக்கு சீருடை வழங்க பட்டது.
2. விளம்பர பலகைகளில் தமிழ் தேசிய வசனங்கள் இடம்பெற்றன.
3. மாடு பிடி வீரர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது.
4. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு  பரிசு பொருட்கள் வழங்க
பட்டன.

*வழங்கப்பட்ட பரிசு பொருட்கள்*
* அலங்கார மேசை – 30
* மேசை மின்விசிறி – 50
* உணவருந்தும் மேசை – 50