கிணத்துக்கடவு தொகுதியில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைப்பூசத்திற்கு நடைபயணம் செய்யும் முருக பக்தர்களுக்காண சேவைக்குடில் அமைக்கப்பட்டது . சனவரி 19 தேதியிலிருந்து சனவரி 21 ஆம் தேதிவரை தொடர்ந்து மூன்று நாட்கள் சேவை வழங்கப்பட்டது. இந்த வேவைக்குடிலில் , தூய குடிநீர், வலிநிவாரண களிம்புகள், ஓய்வெடுக்க வசதி, கைபேசி மின்னேற்றிக்கொள்ள வசதி, முப்பாட்டன் முருகன் படம் பொதித்த கையடக்க நாட்காட்டி, வேல் வழிபாடு குறித்ததான செய்தியடங்கிய துண்டறிக்கை, பாதுகாப்பாக நடைபயணம் செல்ல ஆலோசனை என ஒருங்கிணைந்த சேவைக்குடில் வாயிலாக பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்தனர். இந்தநிகழ்வில் நாம்தமிழர் கட்சி மாவட்டபொறுப்பாளர்கள், கிணத்துக்கடவு தொகுதிபொறுப்பாளர்கள், ஒன்றிய மற்றும் பகுதி பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு களப்பணியாறினர்.
முகப்பு கட்சி செய்திகள்