30.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நிலவேம்பு வழங்கும் நிகழ்வு கிணத்துக்கடவு தொகுதி அரிசிபாளையத்தில் நடக்கவிருந்தது
ஆனால் எதிர்பாரதவிதமாக நிகழ்வு நடக்க இருந்த இடத்தின் அருகில் ஒரு குடும்பத்தில் துக்க நிகழ்வு ஏற்பட்டுவிட்டது.
அவர்களுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பாமல் உடனடியாக மாற்று இடத்தில் நிகழ்வை திட்டமிட்டு கிணத்துக்கடவு தொகுதியில் ஒத்தக்கல்மண்டபம் பகுதியில் இன்று சிறப்பாக நிலவேம்பு மூலிகை நீர் ஏராளமான பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழின பெரியார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு நினைவேந்தல் எடுக்கப்பட்டது மேலும் கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கையும் வழங்கி ஒலிபெருக்கி மூலம் கொள்கை விளக்க பரப்புரை செய்யப்பட்டது. இன்றைய நிகழ்வில் இரண்டு புதிய உருப்பினர்கள் கட்சியில் இணைந்தனர் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கிணத்துக்கடவு தொகுதி காளபோராளிகளுக்கு பொதுமக்களால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.