கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஓசூர்

12

ஓசூர் – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
*********************************************************
கடந்த 22/12/2018 சனிக்கிழமை மாலை 5:00 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர் சூசூவாடி அசோக் லைலண்ட் எதிரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் புதுகை வெற்றிசீலன் அவர்கள் “ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி?” என்ற தலைப்பில் எழுச்சியுரை ஆற்றினார்.நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் அச்சிடப்பட்ட துண்டறிக்கைகள் அப்பகுதி பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.

முன்னதாக அன்று காலை 10:00 மணிக்கு கட்சி அலுவலம் கரிகாலன் குடிலில் ஓசூர் சட்டமன்றத்தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  வெற்றிசீலன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.