#திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் ஊராட்சி #பாம்புகானி கிராமத்தை சேர்ந்த ஓட்டுனரான அப்புக்குட்டி கஜா புயலால் அவரது வீட்டையும் இழந்து மின்கம்பம் காலில் விழுந்து ஒரு காலை இழந்து விட்டார் .அவருடைய தந்தைக்கும் காலில் பலமான காயத்துடன் தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவரான இவருக்கு ஒவ்வொரு நாளும் மருத்துவச்செலவுக்கே பொருளாதரம் இல்லாமல் தவிக்கிறார்.அவருக்கு ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.காலையும் இழந்ததால் இனிமேல் ஓட்டுனர் தொழிலையும் செய்ய முடியாது.இச்செய்தினை தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் வீரசேகர் தமிழன் மூலம் அறிந்து #நாம்_தமிழர்_கட்சி ஆற்காடு தொகுதிச் செயலாளர் பெ.அம்பேத்கர் மற்றும் நாம் தமிழர் கட்சி #கோட்டூர்_ஒன்றிய_நாம்_தமிழர் உறவுகளுடன் இனைந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் அங்கேயே முகாமிட்டு புதிதாக அவர்களுக்கு வீடு கட்டும் பணியை ஆற்காடு நாம் தமிழர் கட்சியினர் நான்கு நாட்களுக்கு முன்பு தொடங்கினர்.
முகப்பு கட்சி செய்திகள்