உழவர் திருநாள்-தமிழர் திரு நாள் விழா- மடத்துக்குளம்

21
16.01.2019 புதன்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி மற்றும் வீர தமிழர் முன்னணி சார்பில் தமிழ் தேசிய விழாவான
 உழவர் திருநாள் மடத்துக்குளம் தொகுதி சார்பாக  நடைபெற்றது!!
நிகழ்வில் உழவனுக்கு உற்ற தோழனான மாட்டுக்கு பொங்கல் வைத்தும்! தமிழ் மறையோன் வள்ளுவப் பெருந்தகைக்கு பொங்கல் வைத்தும்!!  வீரத்தமிழர் முன்னணி உறுதிமொழி எடுக்கப்பட்டு  சிவபுராணம் திருச்சிற்றம்பலம் பாடல் பாடி இயற்கைக்கு வழிபாடுகளும்,உழவனின் தோழனுக்கு நன்றி கூறியும் சிறப்பித்தனர்!!
மேலும் நிகழ்வில் தலைமை அலுவலக முக்கிய நிர்வாகிகளும்,உடுமலை – மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பாப்பாங்குளம் பொதுமக்களும் பலரும் பங்கேற்றனர்!!