நெல்லை மாவட்டம், வள்ளியூரில் தங்கை மெர்சி ஒரு தலைக்காதல் எனும் பெயரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. தங்களது வறுமை நிலையினைப் போக்கவும், குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கவும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் போராடிக் கொண்டிருக்கிற பெண்களைத் தாக்குவதும், கொலை செய்வதுமான இக்கொடுஞ்செயல்கள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. சாதிய ஆணவத்தோடும், ஆணாதிக்கத்தோடும் என எதன்பொருட்டும் பெண்கள் மீதானத் தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. இவற்றில் ஈடுபடும் கொடுங்கோலர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிப் பெண்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் தலையாயக் கடமை.
– சீமான்.